இறைவா நன்றி !
அனைவருக்கும் அடியேனின் பணிவான வணக்கம் !
1) இன்று (7.12.2022) கார்த்திகை திங்கள் மதி நிறைந்த நன்நாள். (கார்த்திகை மாத பவுர்ணமி திருநாள்).
2) மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த , அடியேன் கல்வி பயின்ற ஆலயத்தின் (OVC HSS) நூற்றாண்டு விழா மலரை , பதிவு அஞ்சல் மூலம், இன்று மிகவும் மகிழ்வுடன் பெற்றுக் கொண்டேன்.
3) நூற்றாண்டு விழாவை சிறப்புடன் நடத்தி, சரித்திர சாதனை படைத்த, நூ. விழாக் குழுவினருக்கும், நூற்றாண்டு விழா மலரை மிகவும் சிறப்புடன் படைத்துக் கொடுத்து , அழியாப் புகழைப்பெற்ற மலர் குழுவினருக்கும், இதற்கெல்லாம் மூலகாரணமான விளங்கிய, சங்கம உறுப்பினர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்த பெருமைக்குரிய அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் அவர்களுக்கும், விழா சிறக்கவும், விழா மலர் நமது கரங்களில் தவழுவதற்கு மூல காரணமாக விளங்கிய, தங்களது சிரமதானங்களையும், மேலான ஒத்துழைப்பையும் வழங்கிய, அத்தனை நல்உள்ளம் கொண்ட மாமனிதர்களுக்கும் அடியேனின் பணிவான வணக்கத்தையும், நன்றி மலர்களையும் மீண்டும் காணிக்கையாக்கி இந்த இனிய நாளில் மகிழ்கிறேன் .
💐💐💐💐💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அழகர். நம்பியார்
காவல் துணை ஆணையர்.(ப.நி).
ச/அ.உ.எண்.130.

No comments:
Post a Comment