ஈராசிரியர் கதை (அல்லது)
தேடி உதவிய தெய்வ மனிதர்கள்.
(K & N: Kind spl attention & Natural-born helping tendency)
______________________________ _______________________
மனம் '80 கள் நோக்கிப் பின்னே பயணிக்கிறது...
8ஆவது:
1982 மே 15 (சனி)
சிவகங்கையில் மெரிட் தேர்வு. (வென்றால் 9=300,10=300, 11=600,12=600 பண உதவி அந்த நாளில்).
மும்முரமாய் (சுயமாய்) பயிற்சித்துவந்த நிலையில், முதல் நாள் வெள்ளி, மாலை வாசலில் நிழல் தட்டுப்பட... நிமிர்ந்தால்... அட, கிருஷ்ணன் சார்.!! (பாகபத் தெரு பக்கம் இவருக்கு வேலையே இல்லையே?! என் வீட்டைத் தேடிக் கண்டுபிடித்து வந்திருக்கிறார் மனிதர்!).
உள்ளே அழைத்துப்போய் நாற்காலி தந்து பவ்யமாய் நின்றேன்.
''ஒரு நோட்டு கொண்டுவா...''
எடுத்து வந்து தந்தேன்.
''நாளைக்கு மெரிட் போறே இல்லியோ, அதில இப்படி கேள்விகள் வரலாம்...'' என்று வரிசையாய் மாதிரி கணக்கு விளக்கங்கள்...நுட்பங்கள்...சொ ல்லிக்கொண்டே போகிறார். தலையாட்டிக் கேட்டுக் கொண்டேன்.
எனக்குப்பின் கதவருகில் அம்மா சைகை. ''காபி சாப்பிடுவாரா கேளு, இந்தா..."
அளித்தேன்.
''ஓ, சரி குடு'' என்று லேசாய் சிரித்துக்கொண்டே வாங்கிப் பருகினார்.
''நன்னா இருக்கு, இந்தா...'' அவரிடமிருந்து டபரா டம்ளரை பெற்று அம்மாவிடம் கொடுத்தவன் வாசலுக்கு அவரோடு நகர்ந்தேன்.
''வரேம்ப்பா...நன்னா தைரியமா எழுதணும், சரியா,'' புறப்பட்டார்.
இனம் புரியா உணர்வுகள் உள்ளுக்குள் ஓட 'ரொம்ப தேங்க்ஸ் சார்...'' என்றேன் மையமாக.
வேஷ்டியை தூக்கிப் பிடித்தவாறே கோயில்புறமாக சடுதியில் நடந்து மறைந்தார்.
8-ஆவதில் மெரிட் தேறி, பணம் கிடைத்தது அப்போதைக்கு பெரும் உதவி.
1984: 10ஆவதில், நல்லோர் ஆசியில் school first; மேலும் கட்டிய வீட்டுக்கு மின் இணைப்பில்லாமல், பர்மா காலனி தெருவிளக்கில் படிப்பு, (நண்பர் லோகு அறிவார்!). அந்த மெரிட் ₹ 600/- வீட்டு ஒயரிங் செய்ய எனது 'சொந்தக் கொடை' ஆனதும் தனியான சுவாரஸ்ய கதைகள்..!
============================== ==========================
இதன் சில ஆண்டுகள் பின்...
மூத்த சகோதரன் மறைவு ... நாங்கள் ஆளுக்கொரு புறம் அலைச்சல்கள்...
நினைவு தெரிந்த அந்த முதல் அதிர்வு நீங்குமுன்... அது இருக்கட்டும்.
தம் தன்னார்வ உதவியாட்கள் குழு சகிதம் இப்படிப்பட்ட சூழல்களில் தானே போய் உதவுவது திரு நாகநாதன் வழக்கம். எமக்கும் அன்று அப்படியே.
வெளி அலைச்சல் பின் வீடு திரும்பினால்... அவரேதான்... தன் ஆட்களோடு ஏற்பாடுகளை முனைந்து செய்து கொண்டு... ''ம்ம்ம்... என் ஸ்டூடன்ட்...'' குனிந்து கயிறு இறுக்கியவர் குரல் கம்மிற்று.
எல்லாம் முடித்துக் கொடுத்து விட்டு கைகால் அலம்பிக்கொண்டு ஸ்தலத்திலிருந்து கிளம்பியவருக்கு நன்றி சொல்லவும் இயலா இக்கட்டு, படபடப்பு எமக்கு ...
============================== ======================
இங்கு (மே. வங்கம்) பணியேற்று வந்த சில நாள்களில் நினைவோடு இரு சிறு அன்பளிப்பு பொருள்கள் தபாலில் அனுப்பி வைத்து இருவருக்கும் தொலைபேசி எண் பெற்று பேசவும் செய்தேன்.
''எதுக்குப்பா இதெல்லாம்?'' என்றவர்களுக்கு விவரம் சொல்லி நன்றி சொன்னேன்.
2016 ஜூனில் ஒரு சூறாவளி மானைப்பயணத்தில் இருட்டிய சோமநாத அக்கிரகாரத்தில் பேத்திகள் ஆனந்தி, ஸ்ரீநிதிக்கு '70களில் இருந்த வீடு காட்டித் திரும்புகையில் எதிரே...கிருஷ்ணன் சார்.! கைகளைப்பற்றிக் கொண்டேன். சின்னவர்களுக்கு பழசு நினைவு கூர்ந்தேன். சிறுமி ஸ்ரீநிதி அவரை குனிந்து நமஸ்கரித்துக் கொண்டாள். பொக்கை வாயால் ஆசீர்வதித்து மகிழ்ந்தார்.
============================== ========================
மானையில் இவர்கள் போன்றோர் தத்தம் வாழ்க்கைக்கு வெளியிலும் பரவி கல்வி புகட்டியதில்தான்
ச/அ போன்ற சேவை அமைப்பு செயல்பாட்டிற்கு தேவையான உணர்வூக்கம் உள்ளது என்பதை எத்தனை பேர் அறிவர்.?
-சீ.ராஜூ
[ஒ.வெ செ. மாணவர்: 1973-1986.
சங்கமம் அறக்கட்டளை
ஒருங்கிணைப்பாளர்).
⬆️
இதில் வரும் (10-வது நான் படித்த, 1984)
அந்நன்றிக்குரிய பர்மா காலனி தெருவிளக்கு:
26-6-2023:
ஒ.வெ.செ.பள்ளியில் பணிபுரிந்த ஆசிரியர் திரு.கிருஷ்ணன் அவர்களுடன் மாலையில் ஒரு சந்திப்பு இன்று ஓசூரில். அனைத்து ஆசிரியர்கள் & மாணவர்கள் குறித்து விசாரித்தார்.
-ச.அ.159: பாவேரா. மணிவேலன் avl.
No comments:
Post a Comment