சிகரத்தில் பதாகை...
அயல் தந்த
இடராய்
நால்புறமும்
சவாலெனினும்
மலை முகடுகளின்
எதிர்கொள்ளல்போல்
எதிர்பாரா சூழல்(கள்)
நம்மை எதிரிட்டாலும்
ஒருங்குநின்று
தடை களைந்து
பள்ளியெனும்
சிகரத்தில்
விழாவெனும்
கொடிநாட்டி சாதித்தல் என்பது
கூடிக் கலையும்
அமைப்புகளுக்கு
இயலும் ஒன்றெனல் இயலாதே..!
கடும் உழைப்பை
முதலீட்டாய்க் கொண்ட
நமக்கன்றோ சாத்தியம்...!
No comments:
Post a Comment