13-10-2021
மனதில் நீங்கிடா
பள்ளியின் நிகழ்வுகள்
வாய்வழி மொழிய
வாய்ப்போ இல்லை..
நிகழ்வோ மனதினில் தங்கிடவில்லை..
நிரம்பிய நிகழ்வுகள்
சிந்தைக் கதவை
திறந்து சென்று
நீங்கா நிகழ்வாய்
நீட்சியாகியே..
விரல்வழி சென்று
வரிகளாகிட வாய்ப்பொன்று வழங்கி..
நூறு ஆண்டுகளின்
நினைவின் தொகுப்பில்
இடமும் அளித்து இன்பக் கடலில்
மூழ்கிட வைத்த
இதயம் நிறைந்த யாவர்க்கும்
நன்றிகள் கூறி
மகிழ்கிறேன் நானே...!
________________________________________________
18-8-2022
இறைவனின் அன்பும் கருணையும் உங்கள் மீதும் உங்களது குடும்பத்தார் மீதும் நின்று நிலவட்டுமாக...! சங்கமத்தின் பெரும் முயற்சியால் சிதறிக்கிடந்த ஒ.வெ.செ. வளர்த்த எத்தனையோ மாணவர்களை ஒருங்கிணைத்து. நூற்றாண்டு விழாவில் சங்கமிக்கச் செய்யும் மிகச்சிறப்பான நிகழ்விற்கு இன்னும் ஒரு நாள் அவகாசமே..! மீசை அரும்பாத முகத்தோடு பழகிய நட்புகளை இளைஞனாகவும், குடும்பத்தலைவனாகவும், மாணவப் பருவமாய் பார்த்த நண்பர்களை பல்வேறு பதவி தாங்கி நிற்கும் கண்ணியத்தோடு காணக்கிடைக்கும் அறிய வாய்ப்பில் கலந்து கொள்ளும் ஆர்வம் கலந்த ஆனந்தத்தை.. தவறவிடுவது நினைத்து வருந்துகிறேன்.. கடும் காய்ச்சல் (covid) ஏற்பட்டு தனிமையில் இருக்கும் சூழலில் விழாவில் பங்கெடுக்க முடியாதது எண்ணி வெதும்புகின்றேன்.. சுற்றித்திரிந்த மைதானம்.. சுகம் கொடுத்த மர நிழல்கள்.. கற்றுக் கொடுத்த ஆசான்கள்... முன்னால் நண்பர்களும்..முகமறியா தோழர்களும்.. காணா விழிகள் இரண்டும் விட்டம் பார்த்து நிற்கையில்... உடல் மட்டும் இவ்விடமும்.. சிந்தனை அனைத்தும் ஒரு நாள் முன்பே அரங்கத்தின் ஏதோ ஒரு மூலையில் அமர்ந்திருக்கும். உடல் நலம் பெற்றால் விரைவில் சந்திக்கிறேன்...
_எம்.எம். நிஜாமுதீன்
எனது எண்ண ஓட்டங்களை எக்குத்திக்கும் அறியச் செய்தமைக்கு மிக்க நன்றிகள்
ReplyDelete