Thursday, January 11, 2024

ச.அ. 10ஆம் பரிசளிப்பு விழா

 




10-வது சங்கமம் பரிசளிப்பு விழா!

(2022-'23 கல்வியாண்டு)


  ஒ, வெ. செ. மே. பள்ளியின் முன்னாள் மாணவர்கள் அமைப்பான சங்கமம் அறக்கட்டளை சார்பாக 2023 ஆம் ஆண்டு கல்வி, விளையாட்டு, கலை மற்றும் பல்வேறு பாடப்பிரிவுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணாக்கருக்கு இன்று பரிசளிப்பு விழா பள்ளியில் நடைபெற்றது. 

     இந்த பரிசளிப்பு விழாவில் தலைமை ஆசிரியர் முருகன் அவர்கள் தலைமை தாங்கினார். பள்ளி ஆசிரியர் மற்றும் ஆசிரியைகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 

   மேலும் முன்னாள் மாணவர்கள் அமைப்பான சங்கமம் சார்பில் முன்னணி உறுப்பினர்களும், விருந்தினர்களும் கலந்து கொண்டு 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை முதல் மூன்று இடங்களை பெற்ற மாணாக்கருக்கு பரிசுகளும், சான்றிதழ்களும், நினைவுப் பரிசுகளும் வழங்கப்பட்டது. மேலும் சங்கமம் உறுப்பினர்களின் பரிசாக ஒவ்வொரு பாடப் பிரிவிலும் முதலிடம் பெற்ற மாணாக்கருக்கு பரிசுகள் சான்றிதழ்கள், வழங்கப்பட்டது. இதன் மூலம் சுமார் 120 மாணாக்கர் பயன் பெற்றனர். 

     திருமதி ரேவதி ராஜப்பெருமாள் அவர்கள் பள்ளியில்  பல்வேறு  பரிசுகளைப்  பெற்ற ஜெயசங்கரி என்ற மாணவிக்கு சிறப்புப் பரிசாக ஆயிரம் ரூபாய் வழங்கினார். இந்த பரிசளிப்பு விழாவில் மூத்த உறுப்பினர் அழகர் மகேந்திரன், காவல்துறை உ. சா. ஆய்வாளர். ஜெயமாரி, ஆசிரியர் அழகர்சாமி, திரு.கோவிந்தராஜன், திருமதி அலமேலு கோவிந்தராஜன், ஆசிரியர் சார்லஸ், ஆசிரியை சுதாலட்சுமி, மதுரை பொறியாளர் செந்தில், சிவக்குமார் ALSR, சிவகுமார் காதி கிராப்ட், நாராயணமூர்த்தி பிஎஸ்என்எல், பொறியாளர் கி. கண்ணன், தர்வேஷ் மற்றும் மணிகண்டன், தேவதாஸ்  (பாரதி அச்சகம்), வேலுச்சாமி, சிவகங்கை தேவஸ்தானம் மற்றும் சொக்கு ஆகியோர் கலந்துகொண்டனர். பரிசளிப்பு நிகழ்ச்சி  ஒருங்கிணைப்பை சீ. ராஜூ செய்திருந்தார்.










(தினமலர்)












No comments:

Post a Comment