சதம் காண்பது ஒரு சகாப்தம்.
சத்தியம் காத்திடும் வேள்வி.
அரிது, அரிது நூறாண்டு காண்பது அரிது,
பேராண்மைச் சிறப்பு.
எழுத்தறிவித்தல் அன்ன சத்திரம்
ஆயிரம் வைத்தலினும் மேலாம்.
பயின்றவர்கள் ஆயிரம், ஆயிரம்,
பயன் பெற்றோர் பல்லாயிரம்.
படித்தவர்கள் போற்றுவர்.
பார்த்தவர்கள் வியப்பர்.
காலம் கடந்தாலும், நினைவுகள் மறக்காது.
உயர்வுகள் தனதாக்கி, உன்னதங்கள் மேலாக்கி,
வாழையடி வாழையென, நற் செயல்கள் தொடரட்டும்.
செய்துவரும் தர்மம் மென்மேலும் தொடர,
பள்ளியின் வளர்ச்சி எந்நாளும் வளர,
தொடக்கப்பள்ளி, மேல்நிலைப் பள்ளியோடு,
உயர் கல்லூரிகளும் கண்டு சிறப்புறுதல் வேண்டும்.
மானாமதுரைச் சோமநாதரும், ஆனந்தவல்லி தாயாரும் வந்தமர்ந்து காத்தருள வேண்டும்,
மனத்தகத்து மலர்ந்த எண்ணங்கள் கைகூடி வர வேண்டும்.
நீண்ட பெருவாழ்வும் , நிலைத்த புகழும்,
நீங்காதிருத்தல் வேண்டும்.
பள்ளிக்கும், ச.அ. அமைப்புக்கும் வாழ்த்துகள்.
இப்படிக்கு
மு.சிவகுருநாதன்
மாநில நல்லாசிரியர் விருது பெற்ற தலைமை ஆசிரியர்,
எம்.கே.என்.
நடுநிலைப்பள்ளி,
தெ.புதுக்கோட்டை,
மானாமதுரை வட்டாரம்,
சிவகங்கை மாவட்டம்.
No comments:
Post a Comment