Monday, March 21, 2022

RC பள்ளி HM வாழ்த்து.





"படிப்பு என்னும் படியேறு. 
சொர்க்கம் என்னும் சோலை உனக்குக் கிடைக்கும்" 
என்று மாணவர்களை உற்சாகப்படுத்தி, 
வாழ்விற்கு வழி காட்டி, எளியவர் வாழ்வு உயர கல்விதான் ஆணிவேர் என்று, தொழில்வளம் மிக்க இந்தியாவிற்கான  தொலைநோக்குப் பார்வை கொண்டு, மண்மணக்கும் மானாமதுரையின் மாபெரும் பள்ளியாம் 
ஒ.வெ.செ. மேல்நிலைப்பள்ளியை 
வழிநடத்தும் சான்றோரே, 
விழா மலர் ஏற்பாட்டோரே, 
நீவிர் வாழ்வாங்கு வாழ வாழ்த்துகின்றேன்.

வெள்ளத்தால் அழியாத, வெந்தணலால் வேகாத, 
கள்வராலும் கொள்ளத்தான் முடியாத, 
கொடுத்தாலும் நிறைவேயொழியக் குறைவுபடாத, 
கல்விச் செல்வத்தை வளப்படுத்த, மெருகூட்ட உறுதியாய்த் திகழுகின்ற கல்விக்கழகம் உம்பள்ளி.

எதிர்காலம் சொல்லட்டும், மாணவர் மனதை வெல்லட்டும், என்ற உயரிய சிந்தனையோடு வெற்றிநடைபோட்டு ஆண்டுகள் நூறினைக் கடந்த உம் சேவை கண்டு மகிழ்கின்றேன். 
நெஞ்சத்தின் ஆழத்தில் இருந்து பாராட்டுகின்றேன். 
வாழ்க, வளர்க, உம் சேவை, தொடரட்டும் உம் பணி 
என ஜெபித்து வாழ்த்துகின்றேன்.


அன்புடன்,

Sr. Lourdu Mary,  C.I.C
H.M.
St. Cecilial Middle School.
Manamadurai.

No comments:

Post a Comment