வாழ்த்து மடல்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை மேல்கரையில் 1921-ஆம் ஆண்டுமுதல் செயல்பட்டு வரும் ஒ.வெ.செ. மேல் நிலைப்பள்ளி 100 ஆண்டுகளுக்கும் மேலாக கல்வியின் கலங்கரை விளக்கமாகத் திகழ்ந்து கொண்டிருக்கிறது. பரந்து விரிந்த இடத்தில் அமைந்திருக்கும் இப்பள்ளி பாமர மக்களுக்கும் பட்டறிவைப் புகட்டி பெருமை கொண்டிருக்கிறது. மேன்மை நோக்கத்தோடு செயல்படும் இப்பள்ளி உன்னதத்தோடு உலகமெல்லாம் இப்பள்ளியில் பயின்ற கல்வியாளர்களை கல்விப் பணியாற்ற வித்திட்டிருக்கிறது. மானாமதுரையில் இருந்து சுமார் 20 கி.மீ. சுற்று வட்டார குழந்தைகளுக்கும், மாணவர்களுக்கும் தன்னுடைய கல்விப் பணியாற்றுவதில் நிகரற்று விளங்குகிறது.
மேலும் 'மாணவர் அறக்கட்டளை' எனும் அணுகுமுறையால்இந்தியாவில் உள்ள பல தலைசிறந்த பள்ளிகளுக்கும்கூட ஒருவிதத்தில் முன்மாதிரி எனும் பெருமை உடன்வர, பீடுநடை போட்டுக்கொண்டிருக்கிறது. இப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் மருத்துவம், சட்டம், பொறியியல், வணிகவியல் மற்றும் பொருளாதாரம் போன்ற துறைகளில் சிறந்து விளங்கிவருகிறார்கள். அவர்கள் போன்றோர் ச.அ. உறுப்பினருமாவர்.
அதுமட்டுமல்லாமல் தன்னைச் சார்ந்தவர்களும் பல துறைகளில் சாதனையாளர்களாக உருவாக முயற்சி செய்துள்ளார்கள்; 'சங்கமம் அறக்கட்டளை' அமைப்பால் ஆண்டுதோறும் இப்பள்ளியின் மாணவ, மாணவியருக்கு கல்வி ஊக்க உதவிகளை வழங்குவதோடு பல்வேறு போட்டிகளில் வென்ற மாணாக்கர்களுக்குப் பரிசளித்துப் பாராட்டி மகிழ்ந்து உள்ளார்கள். எனவே இப்பெருமைமிகு பள்ளியில் பணியாற்றும் தலைமையாசிரியர், ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கும் இப்பள்ளியின் வளர்ச்சியில் மனமகிழ்வோடு பங்கெடுத்துப் பணியாற்றும் மானை சங்கமம் அறக்கட்டளை நிர்வாகிகளுக்கும் முன்னாள், இந்நாள் மாணவர்களுக்கும் என்னுடைய மனமகிழ்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வாழ்த்துகளுடன்,
முனைவர் க.சேவுகன்,
M.Com., MBA., MA., MA., MA., MA., M.Phil., PhD.
உதவிப் பேராசிரியர்,
வணிகவியல் துறை மற்றும் ஆராய்ச்சி மையம்,
மன்னர் துரைசிங்கம் அரசுக் கலைக் கல்லூரி,
சிவகங்கை - 630 561.

No comments:
Post a Comment