🌻 திரு.நாகநாதன் மற்றும் திரு.கிருஷ்ணன் ஆகியோரின் புகைப்படங்களை அனுப்பி அவர்களை நான் நினைவுகூர்வதற்கு ஒரு வாய்ப்பினை அளித்தமைக்கு நன்றி! நான் முதன்முதலில் ஒ.வெ.செ. உயர்நிலைப்பள்ளியில் நுழைந்தவுடன் என்னை அன்புடன் முதலில் வரவேற்றவர் திரு.N. நாகநாதன் ஆசிரியர் அவர்கள். மேலும் நான் மதுரை, மதுரைக்கல்லூரி மேனிலைப்பள்ளிக்கு மாற்றலாகி செல்வதற்குப் பெரிதும் உதவியவர்களில் முதன்மையானவர் திரு.V. கிருஷ்ணன் அவர்கள். அன்னார்களின் புகைப்படத்தினை அனுப்பியமைக்கு மிக்க நன்றி!
🌺 ...என் பணியினை நினைவுகூர்ந்துள்ள என் அன்பான மாணவருக்கு வாழ்த்துகள்... என்னுடைய 38 ஆண்டுகள் பணியில் என்னுடைய மாணவர்கள் அனைவருக்கும் சிறப்பான வாழ்க்கை அமைந்திட இறைவனை வேண்டுகிறேன். எனக்கு என் ஆசான்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற பயிற்சியினை என் மாணவர்களுக்கு
அளிக்கவே பணிபுரிந்துள்ளேன். அனைவர்க்கும் நம் OVC பள்ளி நூற்றாண்டு வாழ்த்துகள்! வாழ்க, வளர்க, என் அன்பான மாணவச்செல்வங்கள்!"
V.வீரமணி
மதுரை.
(Ex-Tr /Physical Education,
OVC HSS, Manamadurai).


No comments:
Post a Comment