Monday, May 9, 2022

HM, ஊ.ஒ.நடுநிலைப்பள்ளி, பர்மா குடியிருப்பு, MNM.



'கல்வித் தொண்டு புரிவோர்க்கு என்றுமே அழிவில்லை' என்ற பாவேந்தரின் வரிகளுக்கு ஏற்ப வருங்கால மாந்தரினம் வளமாய் வாழ்ந்திட வளமிகு இம்மானாமதுரை மாமண்ணில்  சொல்லாட்சி மாந்தரெல்லாம் மகிழ்ந்து போற்றிடும் வண்ணம் 100 ஆண்டு வரலாறு படைத்திட்ட ஒ.வெ.செ. மேல்நிலைப் பள்ளியின் ஓங்குபுகழ் கண்டு வியத்தகு பூரிப்படைகிறேன்.


அன்று முதல் இன்று வரை தென்புலத்துத் தமிழ் மிளிர செம்மாந்து சிறகடிக்கும், முத்தனைய சிந்தனைகளால் அத்தனை வித்தகமாய், புத்தகமாய் ஆகிவிட்ட, காலத்தை வென்றெடுத்த கலைக்கூடமாய்க் காட்சியளிக்கும், இளமை குன்றா பாங்குடனே எடுத்தியம்பும் மணிமகுடமாய் சிறந்தோங்கும் இதன் பாங்கே தனி மகுடம். தமிழாய்ந்த உள்ளங்கள் பலரின், பாங்குடனே தனித்திறன் பெற்றோர் பலரின் கான மழை பொழிவதும் இதன் தனிச்சிறப்பு.

கிள்ளிக் கொடுத்துப் புகழ் பெற்றோர் மத்தியில் கல்வி மேன்மைக்கு அள்ளிக் கொடுத்தோரின் பங்களிப்பு அளப்பரியது. நாளொரு சிறப்பும் பொழுதொரு வண்ணமுமாய் இன்னும் தழைத்தோங்க உழைக்கும் சங்கமம் குடும்பத்தாரின் பணி சிறக்க வாழ்த்துகள். நூற்றாண்டு விழா சிறக்க என்னுடைய வாழ்த்துகளும் உரித்தாகட்டும். நன்றி. 


லூ.ஞானசேகர்
HM, ஊ. ஒ. நடுநிலைப்பள்ளி,
பர்மா குடியிருப்பு,
மானாமதுரை.

No comments:

Post a Comment