Blessing us with the OVC@100 Centenary Shawl, presented to her, (who opened up my alphabets & numerals -S.Ra).
வணக்கம், OVC ஆரம்பப்பள்ளியில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற நேசம் ஆசீர்வாதம் பேசுகிறேன். சுமார் 80 தொடும் நான், என் மகளுடன் சென்னையில் உள்ளேன்.
நமது பெரிய OVC பள்ளி மாணவர்கள் பல ஆண்டுகள் முன் சங்கமம் அறக்கட்டளை என்ற அமைப்பை ஏற்படுத்தி கல்விப் பணிகளை செய்து வருவது பற்றி மிக்க மகிழ்ச்சி.
அறக்கட்டளைக்கும் தற்போது கொண்டாடும் பெரிய OVC நூற்றாண்டு மலருக்கும் முயற்சி எடுத்து, பலருடன் சேர்ந்து அதை சிறப்பாக முடித்துள்ள எனது ஒன்றாம் வகுப்பு மாணவன் எஸ். ராஜூ வடநாட்டில் பணி செய்வது அறிந்தேன். அவர் வரமுடியாத சூழ்நிலை என்பதும் தெரியவந்தது.
ஆகையினால் அவரது சார்பாக இந்த மலரை மானாமதுரை பள்ளி விழாவில் வெளியிட வேண்டும் என்ற அவரது வேண்டுகோள் அறிந்தேன். எனக்கும் அதில் ஆர்வமே.
தன்னிடம் அரிச்சுவடி படித்த மாணவன் முயற்சித்துள்ள நூற்றாண்டு மலரை அவனது ஒன்றாம் வகுப்பு ஆசிரியையே வெளியிடும் வாய்ப்பு எத்தனை பேருக்கு கிடைக்கும்? மிக மிக அரிய ஒன்று. மிகவும் பெருமையான ஒன்று.
உடல்நலம் தொடர்பான சூழ்நிலையால் எனக்கு வர இயலாத நிலை. பள்ளி நூற்றாண்டு மலரை மனமகிழ்ந்து, ஜெபித்து வாழ்த்துகிறேன். என் மாணவன் ஈடுபட்ட நூற்றாண்டு மலரை நானே மானசீகமாக வெளியிட்ட மகிழ்ச்சியை உணர்கிறேன்.
முயற்சி எடுத்த சங்கமம் அறக்கட்டளைக்கும், விழா தொடர்பான மற்ற
அனைவருக்கும் வாழ்த்தும், நன்றியும்.
இப்படிக்கு
நேசம்
OVC தொடக்கப்பள்ளி
முன்னாள் ஆசிரியை.
Click to listen: ↓
No comments:
Post a Comment