வைகை ஆற்றின் கரையில் அமைந்துள்ள மண்மணக்கும் பூமியாம் மானாமதுரையில் செயல்பட்டுவரும் நூற்றாண்டு கடந்த கல்விச்சாலை எமது ஒ.வெ.செ. மேல்நிலைப்பள்ளி. மானாமதுரை நகரைச் சுற்றியுள்ள சுமார் 40 கிராமங்களுக்கு கல்வியைத் தந்து பெருமை பெற்றுள்ளது.
இந்த கல்விச்சாலையில் பயின்ற மாணவர்கள் பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர். அதில் பலர் உயர்பதவி வகித்தும் பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ளனர். முன்னாள் மாணவர்களால் செயல்படும் சங்கமம் அறக்கட்டளை என்ற அமைப்பினால் பள்ளிக்கும் வருங்கால சமுதாயத்திற்கும் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை சிறப்பான முறையில் செய்து வருகின்றனர். எனது தந்தை மற்றும் சகோதரர்கள் இப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் என்பதில் நான் பெருமை கொள்கிறேன்.
இப்பள்ளியில் பணியாற்றும் தலைமையாசிரியர், இருபால் ஆசிரியப் பெருமக்கள், முன்னாள், இந்நாள் மாணவர்கள், அலுவலக பணியாளர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த பாராட்டுகள். இப்பள்ளி மென்மேலும் வளர வாழ்த்துகிறேன்.
வாழ்த்துக்களுடன்,
அ. சுதாகர்
M.A., M.Phil., B.Ed.
தலைமையாசிரியர்,
சுவாமி விவேகானந்தா உயர்நிலைப் பள்ளி,
சிவகங்கை.

No comments:
Post a Comment